போற்றுவோமே போற்றுவோமே

போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவாரை இவ்வேளையிலே – நன்றியுடனே

1. துங்கவன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமெ ஒளி மங்கிடாமலே தங்கிடவேணும் – போற்றுவோமே

2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே – போற்றுவோமே

3. பாவம் போக்கியே கோபம் மாற்றிய ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த துய வேந்தனே
தூயாநேயா காயமாற்றிய கருணாநிதியே பரிகாரியே – போற்றுவோமே

4. பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க – போற்றுவோமே

5. புரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன் – போற்றுவோமே



potrruvome potrruvome

potrruvome potrruvome
em thevarai ivvelaiyile – nandriyutane

1. thungkavan iyesuve thuya umakke thuthikal satrriduven
mangka bukazhum makizhnththupotri engkum thuthiththiduven
kangkul ara engkume oli mangkidamale dhangkitavenum – potrruvome

2. aazhnthdha setrrinil amizhnthdha emmaiye anaiththu eduththone
aazhidhanilembava merinthdha annai uthdhamane
andrum indrum endrum thuthibben mannavanaiye manathinile – portruvome

3. pavam pokkiye kopam matrriya rokam tholaithone
thuroki ennaiye suththikarithdha thuya venthdhane
thuya neya kayamarriya karuna nithiye parikariye – potrruvome

4. parilennaiye piritheduththone thavivanththone
akamathinile aavi iinththita arul nirainthdhavane
dharichanam dhanthdha thevane parisuthdhamay paril jeevika – beாrruveாme

5. buranar aakave buvil vaznththita kirubai aliththone
bukazai virumben makizhven thiname makimai seluththiduven
kone thene kothillathone kanam padiye thuthithiduven – potrruvome